×
Saravana Stores

ராமேஸ்வரம் பாம்பன் புதிய பாலம்: 2மாதத்தில் ரயில் சோதனை ஓட்டம்

ராமேஸ்வரம்: பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தில் 2 மாதங்களில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஆய்வு செய்த ரயில்வே உட்கட்டமைப்பு பிரிவு உறுப்பினர் அணில்குமார் பேட்டியளித்தார். புதிய தூக்குபாலம், ராமேஸ்வரம் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களை ரயில்வே உள்கட்டமைப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில் தெற்கு ரயில்வே முதன்மை பொறியாளர் குழு மற்றும் மதுரை கோட்ட மேலாளர் ஆகியோரும் பங்கேற்றனர்.

The post ராமேஸ்வரம் பாம்பன் புதிய பாலம்: 2மாதத்தில் ரயில் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Pamban New Bridge ,Pampan Sea ,Anilkumar ,Railway Infrastructure Division ,Pampan ,Rameswaram Pampan New Bridge ,
× RELATED ராமேஸ்வரம் கோயிலில் மண்டலாபிஷேகம்