×

தேசிய நெடுஞ்சாலை பணிகளை முதல் முறையாக மேற்கொள்ளும் மாநில நெடுஞ்சாலைத்துறை: பணிச்சுமையை குறைக்க அதிரடி நடவடிக்கை!!

சென்னை: தேசிய நெடுஞ்சாலை பணிகளை முதல் முறையாக மாநில நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்கிறது.தேசிய நெடுஞ்சாலை துறையின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் தமிழகத்தில் மிக முக்கிய நான்கு வழிச் சாலைத் திட்டங்களை மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.கூடுதலாக பல பைபாஸ் திட்டங்களும் மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறை, இதுபோன்ற பல கோடி மதிப்புள்ள திட்டங்களை கையாள்வது இதுவே முதல்முறை ஆகும். தூத்துக்குடி – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை, ராமநாதபுரம் – ராமேஸ்வரம் – தனுஷ்கோடி வழித்தடம், கோவை – சத்தியமங்கலம் வழித்தடத்தில் இரண்டு வழித்தடங்கள், சத்தியமங்கலம் – கர்நாடக எல்லை வழி விரிவாக்கப் பணிகள் ஆகியவை மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைவேலூர், வேட்டவளம், திருவையாறு உள்ளிட்டப் பகுதிகளில் பைபாஸ் சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு பதிலாக மாநில நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ளவிருக்கிறது. இந்த திட்டப் பணிகளுக்கான மதிப்பு ரூ.559.17 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை – சத்தியமங்கலம் – தமிழகம் – கர்நாடக எல்லைச் சாலை அமைக்கும் பணிகளுக்கு ரூ.639.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கிழக்கு கடற்கரைச் சாலை முதல் தூத்துக்குடி – கன்னியாகுமரி இடையே திருச்செந்துர் வழியாக 120 கிலோ மீட்டர் சாலையை அகலப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. இதற்குத் தேவையான நிலத்தை பெறுவதற்காக ரூ.393.33 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

The post தேசிய நெடுஞ்சாலை பணிகளை முதல் முறையாக மேற்கொள்ளும் மாநில நெடுஞ்சாலைத்துறை: பணிச்சுமையை குறைக்க அதிரடி நடவடிக்கை!! appeared first on Dinakaran.

Tags : State highway department ,Chennai ,State Highways Department ,National Highway ,National Highways Department ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சாலை சீரமைப்பு பணி தீவிரம்