×
Saravana Stores

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுக ரத்தத்தை குடித்த அட்டைகள்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை: அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டுவிட்டது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து செங்கோட்டையன், சி.வி.சண்முகம் உள்ளிட்ட ஆறு முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியான நிலையில், அந்த செய்திக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அழகு முத்துகோன் உருவச்சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்திவிட்டு சென்றார். இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது; அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறியுள்ளது.

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுக ரத்தத்தை குடித்த அட்டைகள், அவர்களை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறுவது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகள். அதிமுக தொண்டர்களின் ரத்தத்தைக் குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை. அதிமுகவை 90% இணைத்து விட்டதாக சசிகலா கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது. இந்த மூவரை தவிர அதிமுகவிலிருந்து வேறு யாரும் விலகிச் செல்லவில்லை என்றார். நேற்றைய அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்றும் ஈபிஎஸ் நிர்வாகிகளிடம் கூறியதாக தகவல் வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த கருத்து முக்கியமாக பார்க்கப்படுகிறது.

The post ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுக ரத்தத்தை குடித்த அட்டைகள்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : OPS ,Sasikala ,Dhinakaran ,AIADMK ,Jayakumar ,Chennai ,Vethalam ,Annamalai ,Sengottaiyan ,CV ,Shanmugam ,Edappadi Palaniswami ,Dinakaran ,
× RELATED சென்னை தலைமை அலுவலகத்தில் 53வது ஆண்டு...