×
Saravana Stores

தென்காசி தனியார் விடுதியில் தங்கியிருந்த யூடியூபர் சாட்டை துரைமுருகனை கைது செய்தது போலீஸ்

தென்காசி: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கலைஞர் மற்றும் தமிழ்நாடு அரசு பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தென்காசி தனியார் விடுதியில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர்.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூபரான சாட்டை துரைமுருகன் தினமும் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் அரசியல் குறித்தான கருத்துக்களை அவரின் யூடியூப் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது கலைஞர் மற்றும் தமிழ்நாடு அரசு பற்றி அவதூறாக பேசியதன் காரணமாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளனர். தென்காசி தனியார் விடுதியில் யூடியூபர் துரைமுருகனை போலீசார் கைது செய்தனர்.

The post தென்காசி தனியார் விடுதியில் தங்கியிருந்த யூடியூபர் சாட்டை துரைமுருகனை கைது செய்தது போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Sattai Duraimurugan ,Tenkasi ,Sattai Durai Murugan ,Tamil Nadu government ,Vikravandi ,Chattai Duraimurugan ,Naam Tamil Party ,YouTuber ,
× RELATED நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில்...