×

தேக்கடி படகுத்துறைக்கு நவீன பேட்டரி கார்கள் : கேரள வனத்துறை ஏற்பாடு

கூடலூர் : தேக்கடியில் ஆனவச்சால் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து படகுத்துறைக்கு செல்ல புதிய நவீன பேட்டரி கார்களை கேரள வனத்துறை அறிமுகம் செய்துள்ளது.சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.

தேக்கடியில் யானை சவாரி, நேச்சர்வாக், மூங்கில் படகு சவாரி என பலபொழுது போக்கு அம்சங்கள் இருந்தாலும், படகு சவாரியின்போது நீர்நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவையினங்களையும் காணலாம் என்பதால் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விருப்பத்தில் படகுச்சவாரி முதலிடம் வகிக்கிறது.

தேக்கடி சோதனைச்சாவடியை தாண்டி சுற்றுலாப்பயணிகள் வாகனங்களை கேரள வனத்துறை அனுமதிப்பதில்லை. அதனால் படகுச்சவாரிக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள், ஆனவச்சால் வாகன நிறுத்துமிடத்திலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ள படகுத்துறைக்கு வனத்துறை பேருந்துகளில்தான் செல்ல வேண்டும்.
இதற்கௌ கேரள வனத்துறை 8 பஸ்களை இயக்குகிறது. நேற்று முதல் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் 2 பேட்டரி கார்களை சுற்றுலாப்பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “பெங்களூரில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 2 பேட்டரி கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மணிக்கு 20 முதல் 30 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த வாகனத்தில் 6 பேர் பயணிக்கலாம். முதற்கட்டமாக 2 கார்கள் வந்துள்ளது. மேலும் பேட்டரி கார்கள் வந்தபின் பஸ் பயன்பாடு படிப்படியாக நிறுத்தப்படும்’’ என்றனர்.

The post தேக்கடி படகுத்துறைக்கு நவீன பேட்டரி கார்கள் : கேரள வனத்துறை ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Tekkadi ,Kerala Forestry Department ,Koodalur ,Kerala Forest Department ,Anavachal ,Thekkadi ,Tekadi ,India ,Kerala Forestry Organization ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு பேருந்து கடத்தல்