×

ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை இன்று தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தருமபுரி: ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை இன்று தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் காலை 11.30 மணிக்கு -மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கடந்தாண்டு டிச.18-ம் தேதி கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கென 20 பிரத்யேக பேருந்துகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி ஓமலூர் விமான நிலையப்பகுதி உள்ளிட்ட இடங்களில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை இன்று தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA ,Darumpuri ,K. Stalin ,Tharumpuri ,STALIN ,PALAYAMPUDUR, DARUMPURI DISTRICT ,Goa ,Chief Minister of Rural Areas ,Chief Minister ,
× RELATED திராவிட மாடல் என்பது இந்திய...