×
Saravana Stores

டாஸ்மாக் நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை; பணியாளர் சங்கம் தகவல்

சென்னை: சில்லறை மதுபான விற்பனையில் புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் நிர்வாகத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் மேலாண் இயக்குநர் விசாகன் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பெரியசாமி, பொதுச்செயலர் தனசேகரன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடும் எட்டப்படவில்லை. இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் தனசேகரன் கூறுகையில், ‘‘இன்றைய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. எனவே, அடுத்தகட்டமாக ஆலோசனை நடத்தவுள்ளோம்’’ என்று கூறினார்.

The post டாஸ்மாக் நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை; பணியாளர் சங்கம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,CHENNAI ,Tasmac Employees' Association ,Dinakaran ,
× RELATED 20% போனஸ் அறிவிப்புக்கு டாஸ்மாக் பணியாளர் நன்றி