- அண்ணாமலை
- ஆர் பாரதி
- சைதாப்பேட்டை
- சென்னை
- திமுக
- ஆர்.எஸ்.பார்தி
- பாஜக
- ஜனாதிபதி
- கள்ளக்குறிச்சி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அண்ணாமலை சைதாப்பேட்டை
- ரூ
- பாரதி
- சைதாப்பேட்டை
- தின மலர்
சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு சம்பவத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். இந்நிலையில், நேற்று காலை தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது ரூ.1 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: ஆர்.எஸ்.பாரதி எல்லை கடந்து பேசிவிட்டார். ஆர்.எஸ்.பாரதி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நீதிபதியிடம் ரூ.1 கோடி மானநஷ்டஈடு கேட்டுள்ளோம். அந்த பணத்தில் கள்ளக்குறிச்சியில் போதை மறுவாழ்வு மையம் அமைக்க உள்ளோம் செல்வப்பெருந்தகை நீதி மன்றம் சென்றால், எதிர்கொள்ள தயார். ரிசர்வ் வங்கியில் கடைநிலை ஊழியனாக இருந்த செல்வப்பெருந்தகை தற்போது தன்னுடைய பெயரிலும், மனைவி பெயரிலும் லண்டனில் எவ்வளவு சொத்துகள் வைத்துள்ளார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அவர் மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்டது. இந்தியாவில் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஒருவர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருப்பது தமிழகத்தில் மட்டும்தான். நான் சண்டை போட்டால்தான் தமிழக அரசியல் திருந்தும் என்றால் அதற்கு என்னை அர்ப்பணிக்க தயார். அதற்காக என்ன வந்தாலும் சந்திக்க தயார். இவ்வாறு அவர் கூறினார்.
The post ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க கோரி ஆர்.எஸ்.பாரதி மீது அண்ணாமலை வழக்கு: சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர் appeared first on Dinakaran.