×

கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் ராதாகிருஷ்ணன் மறைந்த துயரச் செய்தியறிந்து, தோழர் பாலகிருஷ்ணனை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். ராதாகிருஷ்ணன் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர் – உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

* செல்வப் பெருந்தகை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் கே.ராதாகிருஷ்ணன் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும், அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : K. Balakrishnan ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,M.K. ,State Secretary of the Communist ,Party ,of the ,Communist Party of India ,Stalin ,Tamil Nadu ,M.K.Stalin ,Radhakrishnan ,State Secretary of the Communist Party of the Communist ,of India ,K.Balakrishnan ,
× RELATED அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி: முதல்வர் மு.க.ஸ்டாலின்