லே: இந்திய -சீன எல்லையில் நேற்று முன்தினம் இந்திய-திபெத் எல்லைப்போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். சிஸ்புலி, நார்புலா, சங்லே மற்றும் சக்லா உட்பட கிழக்கு லடாக் பகுதியில் ஊடுருவல் மற்றும் கடத்தல் நபர்களின் நடவடிக்கை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உண்மையான கட்டுப்பாடு கோடு பகுதியில் இருந்து சுமார் ஒருகிலோமீட்டர் தூரத்தில் கடத்தல் சம்பவம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து அங்கு விரைந்த இந்தோ-திபெத் போலீசார் அங்கு இருந்தவர்களை மடக்கி பிடித்தனர். அவர்கள் தங்களை மருத்துவ மூலிகை டீலர்கள் என்று கூறினார்கள். எனினும் போலீசார் நடத்திய சோதனையில் அவர்கள் தங்கக்கட்டிகளை கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ஒரு 108 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒவ்வொன்றும் ஒருகிலோ எடையாகும். கடத்தல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு மொபைல்போன்கள், பைனாகுலர், கத்தி உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post இந்திய-சீன எல்லையில் 108கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் appeared first on Dinakaran.