- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஐ.ஆர்.எஸ்
- யூனியன் அரசு
- புது தில்லி
- மத்திய நிதி அமைச்சகம்
- அனுசுயா
- சுங்கம், கலால் மற்றும் சேவை
- ஹைதெராபாத்
புதுடெல்லி: ஆணாக மாற விரும்பிய மூத்த ஐஆர்எஸ் பெண் அதிகாரியின் பாலின மாற்றத்துக்கு ஒன்றிய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஆர்எஸ் பெண் அதிகாரியான அனுசுயா ஐதராபாத்தில் உள்ள சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைமை ஆணைய அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் தனது பணி பதிவேடுகளில் தனது பெயரை அனு கதிர் சூர்யா என்றும் பாலினத்தை பெண்ணில் இருந்து ஆணாக மாற்ற வேண்டும் என்றும் ஒன்றிய நிதியமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்தார்.
இதற்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 9ம் தேதியிட்ட அலுவலக உத்தரவின்படி, ஒன்றிய அரசின் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் அனுசுயாவின் கோரிக்கையை பரிசீலனை செய்ததாகவும், இனிமேல் அனைத்து அதிகாரப்பூர்வ பதிவேடுகளிலும் அவரது பெயர் திரு. அனுகதிர் சூர்யாவாக அங்கீகரிக்கப்படுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய குடிமை பணி வரலாற்றில் முதல் முறையாக இது நடந்துள்ளது.
The post ஆணாக மாறிய தமிழக பெண் ஐஆர்எஸ் அதிகாரி: பெயர், பாலின மாற்றத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.