×
Saravana Stores

அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்க வில்லை என கே.கே.நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர்; உரிய நேரத்தில் மீட்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு

சென்னை: விபத்தில் காயமடைந்த தனக்கு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்க வில்லை என கூறி, கே.கே.நகர் காவல் நிலையம் முன்பு மது போதையில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கே.கே.நகர் ராணி அண்ணா நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன்(38). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் 5ம் தேதி வாகன விபத்தில் தலையில் அடிப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், அங்கு தனக்கு சரியான சிகிச்சை அளிக்க வில்லை என கூறி, கையில் எடுத்து வந்த மண்ணெண்ெணயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் விரைந்து செயல்பட்டு கமலக்கண்ணனை தடுத்து காப்பற்றினார். மதுபோதையில் இருந்ததால் கமலக்கண்ணனை, அவரது வீட்டிற்கு போலீசார் அழைத்து சென்ற அவரது தாயார் கல்யாணியிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுபோன்று செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்துவிட்டு வந்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் கே.கே.நகர் காவல் நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

The post அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்க வில்லை என கே.கே.நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர்; உரிய நேரத்தில் மீட்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : KK Nagar police station ,CHENNAI ,Rayapetta government hospital ,Rani Anna ,Nagar ,KK Nagar, Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை போரூர் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை