- மலையாளப்பட்டி பச்சமலை
- பெரம்பலூர்
- எஸ்பி ஷியாமளாதேவி
- பெரம்பலூர் மாவட்டம்
- எஸ்பி ஷியாமளாதேவி
- பெரம்பலூர் மாவட்டம்
* பெரம்பலூர் எஸ்பி ஷ்யாமளாதேவி தலைமையில் அதிரடி
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி தலைமை யில் 5 ஆயுதப்படை பெண் போலீசார் உள்பட 46 பேர் கொண்ட குழுவினர்- பெரம் பலூர்மாவட்டம் மலையா ளப்பட்டி பச்சை மலையில் ஏறி, 10 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, திருச்சி மாவட் டம் டாப் செங்காட்டுப்பட்டி வரை கள்ளச் சாராய வேட் டையில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (9ம்தேதி) மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமையில், பெரம்பலூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட அரும்பாவூர் மற்றும் அத னைச் சுற்றியுள்ள பகுதிக ளில் அரசால் தடைசெய்யப் பட்ட கள்ளச் சாராயம் காய்ச்சுதல், ஊறல் போடு தல், விற்பது போன்றவை கள் தொடர்பாக தீவிர தேடு தல்வேட்டை நடத்தப்பட்டது. இந்தத் தேடுதல் வேட்டை யில் மலையாளப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கள்ளச்சாராய ஊறல் எங் காவது பதிக்கி வைக்கப் பட்டுள்ளதாக என்றும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி னர். இந்த தீவிர தேடுதல் வேட்டையில் பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி (பொ) வளவன் மற்றும் அரும்பா வூர் போலீஸ்இன்ஸ்பெக்டர் நிக்சன்,பாடாலூர் இன்ஸ் பெக்டர் பிரபு, பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அம லாக்கப் பிரிவு இன்ஸ்பெக் டர் லதா மற்றும் சப். இன்ஸ் பெக்டர் அரும்பாவூர் சுரேஷ் உள்ளிட்ட எஸ்ஐக்கள், ஏட்டுகள், போலீசார் என ஆயுதப் படையைச் சேர்ந்த 5 பெண் போலீசார் உள்பட 46பேர்களும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் குறிப்பாக பெரம் பலூர் மாவட்டத்தின் வட மேற்கு எல்லையான பசுமை நிறைந்த மலை யாளப் பட்டி அடிவாரத்தில் காலை 7மணிக்கு ஏறத் தொடங்கி, பரவலாக சாராய ஊறல் உள்ளதா எனத் தேடிக்கொண்டே ஆயிரக் கணக்கான மீட்டர் உயரமுள்ள ஒரு மலையை கடந்து 10கிலோமீட்டர்தூரத் திற்குமேல் கரடு முரடான மலைப்பகுதியில் பயணி த்து 11 30 மணி அளவில் அடுத்த மலையின் உச்சி க்கு சென்றனர்.
அங்கு திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகாவிற்கு உட்பட்ட செங்காட்டுப்பட்டி, டாப் செங்காட்டுப்பட்டி, கம்பூர் உள்ளிட்ட மலைக் கிராமங் களில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் பேசிய பெரம்ப லூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம் ளாதேவி, பச்சை மலையில் யாராவது கள்ளச்சாராயம் காய்ச்சினால், விற்றால் அதனை காவல் நிலையத் தில் தெரிவியுங்கள், கள்ள ச்சாராயம் காய்ச்சுவோ ருக்கு உடந்தையாக இருக் காதீர்கள். கள்ளச்சாராயம் சட்டபடி தடைசெய்யப் பட்டுள்ளது.
அதனை யாரும் வாங்கி குடிக்காதீர்கள். அரசு மலைவாழ் மக்க ளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படு த்திவருகிறது. மறுவாழ்வு ஏற்படுத்தக்கூடிய பல்வேறு உதவிகளை செய்து வருகி றது. எனவே சட்டவிரோ தமாக யாரும் கள்ளச்சாரா யம் காய்ச்சக் கூடாது. காய் ச்சுவோருக்கு துணைநிற்க கூடாது எனக் கேட்டுக் கொண்டார். பின்னர் பெரம் பலூர் மாவட்ட காவல்துறை யின் வாகனங்கள் மூலம் துறையூர் சாலைவழியாக 2 மணிஅளவில் பெரம்பலூர் வந்தடைந்தனர்.
தகவல் தர வேண்டுகோள்
முன்னதாக மலையாளப் பட்டி, கவுண்டர் பாளையம், சின்னமுட்லு, வெட்டுவால் மேடு, பூமிதானம், கொட்டா ரக்குன்று பகுதி மக்களிடம், பச்சைமலை மேலிருந்து யாராவது கள்ளச் சாராயம் காய்ச்சிக் கொண்டு வந்து விற்பனைசெய்தால் உடன டியாக அரும்பாவூர் போலீ சாருக்கு தகவல் தரும்படி அறிவுறுத்திச் சென்றனர்.
The post மலையாளப்பட்டி பச்சைமலையில் 10 கிமீ தூரம் போலீசார் கள்ள சாராய வேட்டை appeared first on Dinakaran.