ஊட்டி : இரண்டாவது சீசனுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சால்வியா மலர் செடிகள் தயார் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் முதல் சீசன் முடிந்த நிலையில், தற்போது செப்டம்பர் மாதம் துவங்கும் இரண்டாம் சீசனுக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் இருந்த மலர் செடிகள் அனைத்தும் அகற்றப்பட்டு, பாத்திகள் தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மலர் செடிகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது. பூங்கா முழுவதிலும் நடவு பணிகளுக்காக பாத்திகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. நர்சரிகளில் 2ம் சீசனுக்கான நாற்று உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும், பூங்காவில் அனைத்து பகுதிகளிலும், சாலையோரங்களிலும், நடைபாதை ஓரங்களிலும் வைக்கப்பட்டுள்ள சால்வியா மலர் செடிகள் தற்ேபாது கவாத்து செய்யப்பட்டுள்ளது. தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள சால்விய மலர் செடிகள் கவாத்து செய்யப்பட்டு பராமரிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இந்த மலை செடிகளுக்கு நாள்தோறும் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
The post 2வது சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் சால்வியா மலர் செடிகள் தயார் செய்யும் பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.