- திருவள்ளிகேனி சிங்காரச்சாரி தெரு, சென்னை
- சென்னை
- திருவள்ளிகேனி சிங்கராச்சார்யா தெரு
- கஸ்தூரி ரங்கன்
- திருவள்ளிக்கேணி டிபி கோயில் வீதி
- திருவள்ளிகேனி சிங்காரச்சாரி தெரு
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் மாடு முட்டியதில் 17 வயது சிறுவன் காயம் காயமடைந்துள்ளான். சமீபகாலமாக சாலையில் கேட்பாரற்று சுற்றித்திரியும் மாடுகள் பொது மக்களை முட்டி காயப்படுத்தி வருகின்றன. ஏற்கனவே, திருவல்லிக்கேணி டிபி கோயில் தெருவை சேர்ந்த கஸ்தூரி ரங்கன் என்கின்ற முதியவரை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படும் பாதிப்பைக் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் பிடிப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், திருவல்லிக்கேணி பகுதியில் தொடர்ந்து சாலையோரம் இருசக்கர வாகனத்தில் செல்போன் பேசிக் கொண்டு நின்றிருந்த சிறுவனை மாடு முட்டியது. இதில், முகமது யூசுப்(17)இடது கையில் காயம் ஏற்பட்ட நிலையில், ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாடு முட்டிய சம்பவம் குறித்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் கட்டி வருகின்றனர்.
The post சென்னை திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் மாடு முட்டியதில் 17 வயது சிறுவன் காயம்..!! appeared first on Dinakaran.