×
Saravana Stores

சுற்றுலா செல்பவர்களுக்கு சிறப்பு சலுகை

சென்னை: சென்னை சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், சுற்றுலா பயணத்திட்டங்கள், சுற்றுலா பேருந்து சேவைகள், படகு சேவைகள், தொலைநோக்கி இல்லங்கள் என குறைந்த செலவில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சுற்றுலா சேவைகளை வழங்கி வருகின்றது.

ஒரு நாள் சென்னை – மாமல்லபுரம் சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சுற்றுலா பயணத்திட்டங்களை மேற்கொள்ள 10 இருக்கைகளுக்கு மேல் சேர்ந்தாற்போல் முன்பதிவு செய்பவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணச் சலுகை அளிக்கப்படுகின்றது. இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்திற்கு செயலாளர் சந்தரமோகன், ஆணையர் சமயமூர்த்தி, சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் கவிதா உள்பட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post சுற்றுலா செல்பவர்களுக்கு சிறப்பு சலுகை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Ramachandran ,Tamil Nadu Tourism Development Corporation ,Tamil Nadu Hostels ,Amudagam ,Chennai Tourism Development Corporation ,
× RELATED சென்னைக்கு கனமழை எச்சரிக்கை...