×

10 ஆண்டுகளில் எத்தனை வீரர்கள் உயிரிழப்பு? ஒன்றிய அரசுக்கு சிவசேனா எம்பி ராவத் கேள்வி

மும்பை: மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா(யூபிடி) எம்பி சஞ்சய் ராவத், கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து பிராந்தியத்தில் அதிகரித்து வரும் நிலைமை கவலையளிக்கிறது. இந்த அரசின் ஆட்சிக்காலத்தில் ஜம்மு காஷ்மிரில் அதிகபட்ச ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, குறிப்பாக 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரின் நிலைமை மோசமடைந்து வருகின்றது. உயிர்தியாகம் செய்த வீரர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை நாங்கள் கோருகிறோம் என்றார்.

The post 10 ஆண்டுகளில் எத்தனை வீரர்கள் உயிரிழப்பு? ஒன்றிய அரசுக்கு சிவசேனா எம்பி ராவத் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Shiv ,Rawat ,Union Govt. ,MUMBAI ,Shiv Sena ,UPD ,Sanjay Rawat ,Jammu and Kashmir ,Union Government ,
× RELATED சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை 22% உயர்த்தியது ஒன்றிய அரசு..!!