- தமிழ்நாடு பார்க் கவுன்சில்
- சென்னை
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்
- பல்லாவரம்
- சத்ய
- மாமல்லபுரத்தில்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மாமல்லபுரம் அருகே போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட குற்றப் பதிவேடு குற்றவாளி ரவுடி சத்தியா (எ) சீர்காழி சத்தியாவுக்கு ஆயுதங்கள் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பல்லாவரத்தை சேர்ந்த வழக்கறிஞர் அலெக்சிஸ் சுதாகர், மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்ட பாளையம்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.ஜிம், போதை பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட பாடி புதுநகரை சேர்ந்த வழக்கறிஞர் கே.சரவணன், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள மயிலாப்பூரை சேர்ந்த சேதுபதிபாண்டியன் ஆகியோர் வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில நீதிமன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும் வழக்கறிஞராக தொழில் செய்ய தடை விதிக்கப்படுகிறது. டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட அஞ்சுகிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் பாசில், வில்லியம்ஸ் ஆகியோர் மீண்டும் வழக்கறிஞராக தொழில் செய்யலாம். அவர்களுக்கு 2011ல் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
The post குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை: தமிழ்நாடு பார்கவுன்சில் உத்தரவு appeared first on Dinakaran.