×

பனகல் அரசர் பிறந்தநாள்; முதல்வர் உறுதியேற்பு

சென்னை: முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசரின் பிறந்தநாளை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: இந்து சமய அறநிலையத் துறை, இடஒதுக்கீடு போன்றவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்த சட்டங்களைக் கொண்டு வந்து திராவிட வரலாற்றில் துருவ நட்சத்திரமாக விளங்கும் பனகல் அரசரின் பிறந்தநாளில் அவரது சாதனைகளைப் பயின்று உரமூட்டிக் கொள்வோம். திராவிடச் சமத்துவம் நிலைபெறத் தொடர்ந்து வெல்வோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

The post பனகல் அரசர் பிறந்தநாள்; முதல்வர் உறுதியேற்பு appeared first on Dinakaran.

Tags : King ,Panagal ,Chief Minister ,Chennai ,M.K.Stalin ,Chennai Province ,
× RELATED குரங்கம்மை நோய் தொடர்பாக வழிகாட்டு...