×

ஒரு நபர் குழுவை அமைத்த தமிழக அரசு நடவடிக்கைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

சென்னை: ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பதிவில் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது: இந்த மாதம் 1ம்தேதி முதல் அமலுக்கு வந்த 3 குற்றவியல் சட்டங்களில் மாநிலத் திருத்தங்களை பரிந்துரைக்க ஒரு குழுவை நியமிப்பதற்கான தமிழக அரசின் முடிவை வரவேற்கிறேன். ஓய்வு பெற்ற நீதிபதி கே.சத்தியநாராயணன் ஒரு நபர் குழுவாக நியமிக்கப்பட்டதையும் வரவேற்கிறேன். குற்றவியல் சட்டம் என்பது அரசியலமைப்பின் பொதுப்பட்டியலில் வரக்கூடிய ஒன்று. இதில் திருத்தங்கள் செய்ய மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறை, சட்ட ஆசிரியர்கள், வல்லுநர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என அனைவரிடமும் ஒருநபர் ஆணையம் ஆலோசனை பெற வேண்டும்.

The post ஒரு நபர் குழுவை அமைத்த தமிழக அரசு நடவடிக்கைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : P. Chidambaram ,Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Justice ,Sathyanarayanan ,Union Government ,Congress ,
× RELATED திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது: ப.சிதம்பரம் பேட்டி