×

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து 36 பேரிடம் விசாரணை: செல்போன் எண்கள் சேகரிப்பு

குன்னூர்: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக 36 பேரிடம் விசாரணை நடந்தது. குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் இறந்தனர். காயமடைந்து பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங்கும் நேற்று மரணம் அடைந்தார். இந்த ஹெலிகாப்டர்  விபத்து குறித்து ஒன்றிய  அரசு நியமித்த விசாரணை அதிகாரியான ஏர் மார்ஷல்  மன் வேந்தர் சிங்  தலைமையிலும், தமிழக காவல்துறை சார்பில் ஏடிஎஸ்பி  முத்துமாணிக்கம்  தலைமையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த  மறுநாள் தீவிர  சோதனைக்கு பிறகு கருப்புப்பெட்டி மீட்கப்பட்டு ஆய்விற்கு  பெங்களூர்  விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஹெலிகாப்டரின்  எஞ்சிய  பாகங்களை சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எரிந்த நிலையில்  உள்ள பாகங்களின்  சாம்பலும் ஆய்விற்கு எடுக்கப்படுகிறது. விபத்து  நடந்த  தினத்தன்று  நஞ்சப்பன்சத்திரம் பகுதியில்  பதிவான செல்போன் எண்களும்  சேகரிக்கப்படுகின்றன. ஹெலிகாப்டர் விபத்தினை கடைசியாக வீடியோ எடுத்த கோவையை சேர்ந்த சுற்றுலா பயணி நாசர் என்பவரின் செல்போனை பறிமுதல் செய்து வீடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து நடைபெற்ற இடத்தில் உயர் மின் அழுத்த கம்பங்கள் இல்லை என மின்சாரத்துறை  விளக்கம் அளித்துள்ளது. விபத்தை நேரில் பார்த்தவர்கள், தீயணைப்பு துறையினர்,  108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், வருவாய் துறையினர், மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் என 36 பேரிடம் விசாரணை குழு விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது….

The post குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து 36 பேரிடம் விசாரணை: செல்போன் எண்கள் சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Dinakaran ,
× RELATED குன்னூர் அருகே குப்பையில் உணவு தேடிய கரடி