கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருக்கும் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 29 பேர் பலியானதாக கூறப்படுகிறது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முயற்சிகள் நடக்கும் நிலையில், வாஷிங்டனில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இன்று புறப்பட்டார்.
ரஷ்யாவுடனான நேட்டோ பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பிரதமர் மோடி இன்று ரஷ்ய அதிபர் புதினுடன் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசவுள்ளார். இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பிற நகரங்களான டினிப்ரோ, கிரிவி, ரிக், ஸ்லோபியன்ஸ்க், க்ரெமாடோஸ்க் ஆகிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் கீவின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைத் தாக்குதல்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்? என்பது இதுவரை எந்த தகவலும் இல்லை. சுமார் 29 பேர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேற்கண்ட சம்பவத்திற்கு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
The post கீவ் மருத்துவமனை மீது தாக்குதல்; குழந்தைகள் உட்பட 29 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.