தேவையான பொருட்கள்
கேழ்வரகு முழு தானியம் – 2 கப்
கொள்ளு – 2 மேஜைக்கரண்டி
முழுப் பயறு – 2 மேஜைக்கரண்டி
பச்சரிசி – 1 கப்
முழு உளுந்து – ½ கப்
கடலைப் பருப்பு – ¼ கப்
வெந்தயம் – 1 தேக்கரண்டி
1 தேக்கரண்டி ஈஸ்ட்
ஸ்பினாச் கீரை – 2 கப்
வெங்காயம் – 1 கப்
இஞ்சி – 1 அங்குலம்
பூண்டு – 4 பல்
சிவப்பு மிளகாய் – 6
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1 மேஜைக்கரண்டி
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை
பெரிய பாத்திரத்தில் 6 கப் நீர் சேர்த்து உளுந்து, வெந்தயம், கடலைப் பருப்பு, பயறு, கொள்ளு, அரிசி ஆகியவற்றை 6 மணி நேரம் ஊறவைக்கவும். இதோடு வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய் சேர்த்து சிறிது கொரகொரவென்று அரைக்கவும். முழு கேழ்வரகு உபயோகித்தால் தனியாக ஊற வைத்து அரைக்க வேண்டும். பின் இரண்டு மாவுகளையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தோசை மாவை பெரிய பாத்திரத்தில் போட்டு ஈஸ்ட் சேர்த்து சுத்தமான கையால் ஒன்றாக கலக்க வேண்டும். மாவு 4 லிருந்து 5 மணி நேரத்தில் பொங்கி வந்த பிறகு தேவையான உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் கீரை, சீரகம், பெருங்காயம் சேர்த்து கிளறவும். தற்போது மாவு அடை செய்ய தயார். தோசைக்கல்லை மிதமான நெருப்பின் மேல் வைத்து சூடான பின், எண்ணெய் தடவி அதன்மீது தயார் செய்து வைத்துள்ள மாவை எடுத்து ஊற்றி அடை தோசை மேல் பரவலாக ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றுக. இரண்டு பக்கமும் பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து பரிமாறினால் சுவையான கேழ்வரகு அடைதோசை தயார்.
The post கேழ்வரகு அடை தோசை appeared first on Dinakaran.