×

ரூ.1.08 கோடி நகை கடன் மோசடியில் சஸ்பெண்ட் கீரனூர் கூட்டுறவு வங்கி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்தவர் நீலகண்டன்(52). கீரனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்த வங்கியில் நகைக்கடன் வழங்கியதில் ரூ.1.08 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நீலகண்டன் மற்றும் உடந்தையாக இருந்த வங்கி மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நகை மதிப்பீட்டாளர் கனகவேல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.இதில் செயலாளர் நீலகண்டன் ரூ.30 லட்சத்தை திருப்பி கட்டியுள்ளார். மேலும் ரூ.16 லட்சம் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட வங்கி செயலாளர் நீலகண்டன், வங்கி மேற்பார்வையாளர் சக்திவேல் மற்றும் நகை மதிப்பீட்டாளர் கனகவேலு உள்ளிட்டோரை துறை ரீதியான விசாரணைக்காக இன்று (16ம்தேதி) சென்னைக்கு அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை நீலகண்டன், கீரனூர் சிவன்தெருவிலுள்ள அவரது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post ரூ.1.08 கோடி நகை கடன் மோசடியில் சஸ்பெண்ட் கீரனூர் கூட்டுறவு வங்கி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kiranur Cooperative Bank ,Pudukottai ,Neelakandan ,Kiranur ,Pudukottai district ,Kiranur Primary Agricultural Co-operative Bank ,Bank ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!