×

விம்பிள்டன் டென்னிஸ்; காலிறுதியில் சின்னர், மெட்வடேவ் பலப்பரீட்சை: மகளிரில் பவோலினி-எம்மா நவோராவ் மோதல்

லண்டன்: லண்டனில் நடந்து வரும் 2024ம் ஆண்டின் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு நாட்டை சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரங்கள் பங்குபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வந்தது. 4 சுற்று ஆட்டங்கள் முடிவு பெற்ற நிலையில் இன்று மாலை இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை 6 மணிக்கு தொடங்கும் முதல் காலிறுதியில் ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இத்தாலியை சேர்ந்த ஜேன்னிக் சின்னர், தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள ரஷியாவின் டேனில் மெட்வடேவை எதிர் கொள்கிறார். இதுவரை இருவரும் 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் சின்னர் 6 முறையும், மெட்வடேவ் 5 முறையும் வென்றுள்ளனர். நடப்பு தொடரில் யானிக் ஹன்ப்மேனை 6-3, 6-4, 3-6, 6-3, மேட்டியோ பெர்ரட்டினியை 7-6(3),7-6(4),2-6,7-6(4), மயோமிர் கெக்மனோவிக்கை 6-1, 6-4, 6-2 மற்றும் பென் ஷெல்டனை 6-2, 6-4, 7-6(9) என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற சின்னர் காலிறுதிக்குள் நுழைந்துள்ளார். இதேபோல் சுற்று ஆட்டங்களில் அலெக்ஸாண்டர் கோவாசெவிக்கை 6-3, 6-4, 6-2, அலெக்ஸாண்டர் முல்லரை 6-7(3),7-6(4),6-4,7-5, ஜேன் லென்னார்ட் ஸ்ட்ரப்பை 6-1,6-3,4-6,7-6(3) என்ற கணக்கில் வெற்றி கண்ட மெட்வடேவ் 4வது சுற்றில் 10வது நிலை வீரரான பல்கேரிய நாட்டை சேர்ந்த கிரிகர் டிமிட்ரோவை எதிர் கொண்டார். 5-3 என்ற கணக்கில் ஆட்டம் நடந்து கொண்டிருந்த போது காயமடைந்த டிமிட்ரோவ் ஆட்டத்தில் இருந்து விலகினார். இதன் மூலம் மெட்வடேவ் காலிறுதிக்குள் நுழைந்தார்.

கடந்த 2024ம் ஆண்டில் தான் ஆடிய மொத்த ஆட்டங்களில் 42 வெற்றி 3 தோல்வி கண்டுள்ள சின்னர், புல்தரையில் தான் ஆடிய 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் நடப்பு ஆண்டில் மெட்வடேவ் ஆடிய மொத்த ஆட்டங்களில் 32 வெற்றியும், 9 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளார். இதுவரை இருவரும் புல்தரையில் நேருக்கு நேர் மோதியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் விம்பிள்டன் கோப்பைக்கு வரிந்து கட்டுவதால் இன்றைய ஆட்டம் டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் மாலை 6.45 மணிக்கு தொடங்கும் மற்றொரு காலிறுதி போட்டியில் 4வது நிலை வீரரான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த அல்கராஸ் கர்பியா 13ம் நிலை வீரரான அமெரிக்காவை சேர்ந்த டாமி பாலுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். இதேபோல் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் போட்டியில் இரண்டு அரையிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. அதில் மாலை 5.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் தரவரிசையில் 123 இடத்தில் உள்ள நியூசிலாந்தை சேர்ந்த லூலு சுன் 37வது இடத்தில் உள்ள குரோட்டியாவை சேர்ந்த டி வெகிக்குடன் மோதுகிறார். இரவு 8 மணிக்கு தொடங்கும் மற்றொரு காலிறுதி போட்டியில் 7வது நிலை வீராங்கனையான இத்தாலியை சேர்ந்த ஜாஸ்மின் பவோலினி 17வது நிலை வீராங்கனையான எம்மா நவோராவை எதிர்கொள்கிறார்.

 

The post விம்பிள்டன் டென்னிஸ்; காலிறுதியில் சின்னர், மெட்வடேவ் பலப்பரீட்சை: மகளிரில் பவோலினி-எம்மா நவோராவ் மோதல் appeared first on Dinakaran.

Tags : Wimbledon Tennis ,Sinner ,Medvedev ,Paolini ,Emma Navorau ,London ,2024 Wimbledon tennis tournament ,Dinakaran ,
× RELATED அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர்...