அமெரிக்கா: அமெரிக்காவில் ATM-ல் பணம் எடுப்பதைப்போல துப்பாக்கி குண்டுகளை உடனடியாக பெறக் கூடிய வகையில் மளிகை கடைகளில் பிரத்யேக இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனமான அமெரிக்கன் ரவுண்ட்ஸ் என்ற நிறுவனம் இத்தகைய துப்பாக்கி குண்டுகளை எளிமையான எடுக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது. தானியங்கு வெடிமருந்து விநியோகிகள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இது அலபாமா, ஒக்லாஹோமா மற்றும் டெக்ஸாஸ் மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மெஷின் விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது. துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதற்கான அடையாள அட்டையை காண்பித்து, உரிய பணம் செலுத்தி தேவையான குண்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாங்குபவரின் ஐடியை அவர்களின் முகத்துடன் பொருத்தவும், அவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தவும் AI தொழில்நுட்பம், அட்டை ஸ்கேனிங் திறன் மற்றும் முகத்தை அடையாளம் காணும் மென்பொருள்” ஆகிய இயந்திரங்கள் பயன்படுத்துகின்றன. வாடிக்கையாளர்கள் தொடுதிரையில் வாங்க விரும்பும் துப்பாக்கி குண்டுகளை தேர்ந்தெடுத்து, அவர்களின் ஐடியை ஸ்கேன் செய்து இயந்திரத்தின் அடிப்பகுதியில் உள்ள துளையிலிருந்து சேகரிக்கின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் விரிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
The post அமெரிக்காவில் ATM-ல் பணம் எடுப்பதைப்போல மளிகை கடைகளில் துப்பாக்கி குண்டுகள் விற்பனை..!! appeared first on Dinakaran.