×
Saravana Stores

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: முன்னேற்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது; மாவட்ட ஆட்சியர் தகவல்

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், முன்னேற்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பழனி தெரிவித்துள்ளார்.

இந்த தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,040 பெண் வாக்காளர்களும், 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர். 276 வாக்குச்சாவடி மையங்களில் 662 வாக்குப்பதிவு கருவிகளும் (Ballot Unit). 330 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit) மற்றும் 357 வாக்குப்பதிலினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) என மொத்தம் 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பதற்றமான வாக்கு சாவடி 45 உள்ளதால் அங்கு பணி புரிய 53 நுண்பார்வையாளர்கள் பணியில் இருப்பார்கள். தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு சார் அலுவலகங்கள்,தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட தேர்தல் அதிகாரி பழனி கூறியுள்ளார்.

The post விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: முன்னேற்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது; மாவட்ட ஆட்சியர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Vikrawandi Constituency Midterm Election ,District Ruler ,Viluppuram ,District Election Officer ,Palani ,Vikrawandi Assembly ,Vikrawandi ,District Ruler Information ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் நகரில் மாடுகள் கூட்டமாக...