×

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை கட்டடம் விழுந்து தொழிலாளி உயிரிழந்த விபத்தில் 5 பேர் மீது வழக்குப் பதிவு..!!

தேனி: தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை கட்டடம் விழுந்து தொழிலாளி உயிரிழந்த விபத்தில் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கம்பம் அரசு மருத்துவமனையில் புதிய மருத்துவமனை கட்டுமான பணியின் போது நேற்று ஒரு தொழிலாளி உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர். இத்தகைய கம்பம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டிடத்தின் கட்டுமான பணியின் போது நிகழ்ந்தது.

காயமடைந்த சதீஷ்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் கட்டிட ஒப்பந்ததார்களான பாண்டியராஜ் மற்றும் கட்டிட பொறியாளர்களான வெங்கடாசலம், மணிவண்ணன், நவீன் மற்றும் மேஸ்திரி செல்வம் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கம்பம் தெற்கு காவல்நிலையம் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். புதிதாக கட்டி வரும் இந்த மருத்துவமனை கட்டிடத்தில் உரிய தளவாடங்களை சரிவர பயன்படுத்தி கட்டிடம் கட்டாததால் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உடன் பணிபுரிபவர்களும் தெரிவித்த நிலையில் ஒப்பந்ததாரர், பொறியாளர் உட்பட 5 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை கட்டடம் விழுந்து தொழிலாளி உயிரிழந்த விபத்தில் 5 பேர் மீது வழக்குப் பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Theni district ,Gampam government ,Theni ,Kampam Government Hospital ,Theni District Gampam Government Hospital ,Dinakaran ,
× RELATED பெரியாறு அணை உரிமையை தமிழக அரசு...