- திருக்கோவிலூர்
- பாஜக
- விழுப்புரம்
- தாமரை அறக்கட்டளை
- குச்சி முகாம்
- கல்லாக்கிரிச்சி மாவட்டம்
- ஆல்கஹால்
- புனர்வாழ்வு நிலையம்
விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்ததை அடுத்து பாஜக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள குச்சி பாளையத்தின் லோட்டஸ் ஃபவுண்டேஷன் குடிபோதை சிகிச்சை மறுவாழ்வு மையம் மற்றும் மனநல மருத்துவமனை நிறுவனர் பாஜக முன்னாள் கள்ளக்குறிச்சி மாவட்ட துணை தலைவர் காமராஜ் மறுவாழ்வு மையத்தை நடத்த வருகிறார்.
கடந்த 5ம் தேதி சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் குடிப்பழக்கம் அதிகமாக உள்ளதால் அவரது குடும்பத்தினர் லோட்டஸ் ஃபவுண்டேஷன் சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். நேற்றைய தினம் காலையில் ராஜசேகர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். தகவலறிந்து வந்த திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாலாஜி மற்றும் போலீசார் சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில், முதற்கட்ட விசாரணையில் ராஜ சேகர் பிரேத பரிசோதனையில் சில இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அடித்ததால் உயிரிழந்திருக்கலாம் என்ற அடிப்படையில் லோட்டஸ் ஃபவுண்டேஷன் குடிபோதை சிகிச்சை மறுவாழ்வு மைய நிறுவனர் முன்னாள் பாஜக மாவட்ட துணை தலைவருமான காமராஜ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அத்தகைய மறுவாழ்வு மையத்தை காவல் துறையினர் சீல் வைத்துள்ளனர்.
The post திருக்கோவிலூர் அருகே மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு: பாஜக முன்னாள் நிர்வாகி கைது appeared first on Dinakaran.