×
Saravana Stores

2019-ம் ஆண்டு நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!!

சென்னை : 2019-ம் ஆண்டு நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் ஆகியுள்ளது. 2019-ல் நடந்த நீட் தேர்வில் சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா உள்ளிட்டோருக்காக ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவர்கள் உதித் சூர்யா, பிரவீன், ராகுல் டேவிஸ் மற்றும் அவரது தந்தையர் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர். நீட் ஆள்மாறாட்ட மோசடி வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒரு மாணவருக்காக பல மாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதியது அம்பலம் ஆகி உள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த ஒரு மாணவருக்காக, ஜார்க்கண்ட், உ.பி., ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் வேறு நபர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

The post 2019-ம் ஆண்டு நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!! appeared first on Dinakaran.

Tags : NEET ,Chennai ,Udit Surya ,
× RELATED நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைன் மூலம்...