- ரங்கசாமி ஊராட்சி
- புதுச்சேரி
- பாஜக
- புதுச்சேரி மாநிலம்
- லா
- புதுச்சேரி, என். ஆர்.
- காங்கிரஸ்
- ரங்கசாமி
- தின மலர்
புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. புதுச்சேரி மக்களவை தேர்தல் தோல்வியை அடுத்து என்.ஆர்.காங்கிரஸ் பாஜக இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி, பாஜக அமைச்சர்களின் செயல்பாடுகளே காரணம் என பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். முதலமைச்சர் ரங்கசாமி, எதிர்க்கட்சிகளுக்கு தரும் முக்கியத்துவத்தைக்கூட பாஜக எம்எல்ஏக்களுக்கு தருவதில்லை என குற்றம் சாடியுள்ளனர்.
பாஜக எம்எல்ஏக்களிடம் முதல்வர் ரங்கசாமி பாகுபாடு காட்டுவதாகவும் அதிருப்தி எம்எல்ஏக்கள் குற்றம் சாடியுள்ளனர். பிரச்சனைக்கு தீர்வு காண, புதுச்சேரி பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானாவை பாஜக மேலிடம் நியமித்திருந்தது. பிரச்சனைக்கு தீர்வு காண எம்எல்ஏக்களிடம் பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா 10 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார். போர்க்கொடி தூக்கிய பாஜக எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு ஆகியோருடன் நிர்மல்குமார் சுரானா பேச்சுவார்த்தை நடத்தினார்.
பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் சிவசங்கர், அங்காளன், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், நியமன எம்எல்ஏ வெங்கடேசனும் போர்க்கொடி தூக்கியுள்ளார். பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. ரங்கசாமி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதியாக உள்ளனர்.
The post ரங்கசாமி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதில் உறுதி: புதுச்சேரி பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களுடன் நடந்த பேச்சு தோல்வி appeared first on Dinakaran.