×

வாடிப்பட்டியில் வீட்டுமனை பட்டா கோரி உண்ணாவிரத போராட்டம்: தாசில்தார் சமரசம்

 

வாடிப்பட்டி, ஜூலை 9: 2012ம் ஆண்டு முதல் 2024 வரை ஆதிதிராவிட நலத்துறை சார்பாக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டாக்கள் தொடர்ந்து வழங்கப்படால் உள்ளது. இதனை கண்டித்து குடியுரிமைக்கான அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்து இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி நேற்று தொடங்கிய தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு பூர்வீக மக்கள் விடுதலைக் கட்சி தலைவர் செல்லக்கண்ணு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் மதுரை தங்கமணி, தேனி கார்த்திக், ஒன்றிய செயலாளர் சதீஷ், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஸ்ரீதர் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர்களுடன் தாசில்தார் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இப்பிரச்னை தொடர்பாக இரண்டு வாரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

The post வாடிப்பட்டியில் வீட்டுமனை பட்டா கோரி உண்ணாவிரத போராட்டம்: தாசில்தார் சமரசம் appeared first on Dinakaran.

Tags : Vadipatti ,Tahsildar ,Adi Dravida Welfare Department ,Hunger strike ,Dinakaran ,
× RELATED மேல ஆழ்வார்தோப்பில் விழிப்புணர்வு முகாமில் மரக்கன்றுகள் வழங்கல்