×

கள்ளக்காதலி வீட்டுக்கு சென்ற நடிகர் விஜய் கட்சி பிரமுகர் மர்ம சாவு

பண்ருட்டி: கடலூர் மாவட்டம், பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் சங்கர் (56). இவர் தேமுதிக முன்னாள் நகர செயலாளர். இவரது மகன் சூரியபிரகாஷ் (27), கார் டிரைவரான இவருக்கு மனைவி, மகன் உள்ளனர். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கூரியர் சர்வீஸ் நிறுவனத்திற்கு கார் ஓட்டி வந்தபோது அந்த நிறுவனத்தின் அருகில் உள்ள பேன்சி ஸ்டோரில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுடன் சூரியபிரகாசுக்கு தொடர்பு ஏற்பட்டது. அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்து விட்டதால் சூரியபிரகாசுடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் அப்பெண்ணின் வீட்டுக்கு சூரியபிரகாஷ் சென்றபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பொருட்களை உடைத்து சேதப்படுத்தினாராம். இதனால் பயந்துபோன அப்பெண் குழந்தைகளை அருகில் உள்ள வீட்டில் விடுவதற்காக வெளியே வந்ததாக தெரிகிறது. சிறிதுநேரம் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சூர்யபிரகாஷ் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரது சடலம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இதுபற்றி சூர்யபிரகாஷின் மனைவி பார்வதி பண்ருட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரில் கணவரை அடித்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

The post கள்ளக்காதலி வீட்டுக்கு சென்ற நடிகர் விஜய் கட்சி பிரமுகர் மர்ம சாவு appeared first on Dinakaran.

Tags : Vijay ,Marma Chau ,Kallakadali ,Panruti ,Shankar ,Sathyamurthy Street, Panruti, Cuddalore district ,DMD ,Suriyaprakash ,Tamil Nadu ,Vetri Kazhagam ,Marma Sau ,Kallagadali house ,
× RELATED விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து