×

திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பேரூராட்சி பணியாளர் தூக்கிட்டு தற்கொலை

திருப்போரூர்: திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பேரூராட்சி துப்புரவு பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருப்போரூர் தெற்கு மாடவீதியில் காவல் நிலையமும், பத்திரப்பதிவு அலுவலகமும் அருகருகே உள்ளன. நேற்று காலை 6 மணியளவில் பத்திரப்பதிவு அலுவலகத்தை தூய்மைப்படுத்துவதற்காக துப்புரவு பணியாளர் பிரதான வாயிற்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றார்.  அப்போது அந்த வளாகத்தில் உள்ளே வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. திருப்போரூர் போலீசார் அங்கு வந்து பார்த்தபோது அந்த வாலிபர் திருப்போரூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்யும் விஜயகுமார் (34) என்பதும், மதுப்பழக்கத்திற்கு ஆளாகி வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் சுற்றி வந்ததும் தெரிய வந்தது.

நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு மழைக்காக பத்திரப்பதிவு அலுவலகத்தின் உள்ளே நுழைந்து பின்னர் அங்கிருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். மழையினால் தூக்கிட்ட துணி நனைந்து அறுந்ததில் சடலம் கீழே விழுந்துள்ளது. இதனையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பேரூராட்சி பணியாளர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,Police Station ,Deeds Office ,Tiruporur South Mata Veedi ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் நகரப்பகுதியில் பழுதான...