×

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர்கள் வழங்கினர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெயக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி (பொறுப்பு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 480 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்களது கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்த மொத்தம் 1,165 கையடக்க கணினிகளை கலெக்டர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து 14 மாற்றுத்திறனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான நிதியுதவிகளாக ரூ.2,38,500 மற்றும் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடனாக ரூ.3,24,165 உட்பட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயசங்கர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்தில் 476 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வின், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வெற்றிகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நரேந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் அருண்ராஜ் 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மேலும் சிஎஸ்ஆர் நிதி மூலம் ரூ.11,120 மதிப்பீட்டில் 4 பயனாளிகளுக்கு காதொலி கருவிகளும், 1 பயனாளிக்கு ரூ.48,993 மதிப்பீட்டில் பிரெய்லி ரீடர் கருவிகளும், 4 பயனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும், 19 பயனாளிகளுக்கு ரூ.31,084 பிரெய்லி கை கடிகாரம், 2 பயனாளிக்கு ரூ.12,300 மதிப்பீட்டில் கார்னர் சேர் என மொத்தம் ரூ.1,35,097 மதிப்பீட்டில் 30 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் 2 பேருக்கு சக்கர நாற்காலி மற்றும் ஒருவருக்கு பெட்டிக் கடை வைப்பதற்கு அனுமதி ஆணை வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Collector ,Kalachelvi Mohan ,District Revenue Officer ,Venkatesh ,District Rural Development Agency ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்: காஞ்சி கலெக்டர் பங்கேற்பு