×

விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வண்டல், களிமண் எடுப்பதற்கான ஆணை: கலெக்டர் வழங்கினார்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுனை ஏரியில் விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் கட்டணமின்றி வண்டல் மண், களிமண் எடுத்துக்கொள்வதற்கான ஆணைகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கி மண் அள்ளும் பணியினை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் 4 விவசாயிகளுக்கும், 5 மண்பாண்டம் தொழிலாளர்களுக்கும் கட்டணமின்றி ஏரிகளிலிருந்து களிமண் எடுத்துச் செல்வதற்கான ஆணையினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் ஒன்றியக்குழுத் தலைவர் மலர்க்கொடி குமார், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இணை இயக்குனர் ஆறுமுக நயினார், உதவி இயக்குனர் இளங்கோவன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டேயன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வண்டல், களிமண் எடுப்பதற்கான ஆணை: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram district ,Collector ,Kalachelvi Mohan ,Sirunai lake ,Dinakaran ,
× RELATED வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்...