×

கேரளாவில் வெளுத்து கட்டும் பருவமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் சுருளி அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே குஷி

கம்பம்: கேரளாவில் வெளுத்துக் கட்டும் தென்மேற்கு பருவமழையால், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து குளித்து மகிழ்ந்தனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரசித்தி சுற்றுலாத் தலமான சுருளி அருவி அமைந்துள்ளது. இது புண்ணிய ஸ்தலமாகவும் திகழ்கிறது. அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தக்காடு மற்றும் மேகமலை தூவானம் அணை ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்போது, அருவிக்கு நீர்வரத்து இருக்கும்.

தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிறமாவட்டங்கள், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்து குளித்து மகிழ்வர். இந்நிலையில், கடந்த மாதம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும், கம்பம் பள்ளத்தாக்கிலும் தொடர்ந்து சாரல் மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், சுருளி அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து குளித்து மகிழ்ந்தனர்.

 

The post கேரளாவில் வெளுத்து கட்டும் பருவமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் சுருளி அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே குஷி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Polam ,Kuruli River ,Gampam ,Theni District ,West ,
× RELATED ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை...