×

தீவிரவாத ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்: எல்லை பாதுகாப்பு படை நடவடிக்கை

டெல்லி: வங்கதேச எல்லை பகுதிகளில் தீவிரவாத ஊடுருவல், அசம்பாவிதங்களை தடுக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடந்து வருவதாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய எல்லைக்கு அருகே உள்ள பகுதிகளில் அவ்வப்போது தீவிரவாதிகள் ஊடுருவதோடு அசம்பாவித சம்பவங்களும் நடந்து வருகிறது. இதை முற்றிலும் தடுக்கும் பணிகளில் எல்லை பாதுகாப்பு படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் வங்கதேச எல்லை பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து வருவதாகவும், அதை தடுக்க பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று திரிபுரா மற்றும் மேகாலயா அரசு எல்லை பாதுகாப்பு படையிடம் வலியுறுத்தியது. இதையடுத்து இந்திய-வங்கதேச எல்லை பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க ஏஐ(செயற்கை நுண்ணறிவு) கேமாரக்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து பாதுகாப்பு படை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘இந்த கேமராக்கள் மூலம் எல்லை பகுதியை மிக துல்லியமாக கண்காணிக்க முடியும்.

இதன் மூலம் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுப்பதோடு, தீவிரவாத ஊடுருவலையும் தடுக்க முடியும். மேலும் மாநில போலீஸ் மற்றும் இதர பாதுகாப்பு நிறுவனங்களின் கூட்டு முயற்சி உதவியுடன் எல்லை பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார். இந்த ஆண்டில் மட்டும் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தை சேர்ந்த 198 பேர் மற்றும் 12 அகதிகள், ரூ.29 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பொருட்கள், ரூ.32 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறினார்.

 

The post தீவிரவாத ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்: எல்லை பாதுகாப்பு படை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Border Protection Force ,Delhi ,Bangladeshi ,Indian border ,Dinakaran ,
× RELATED அரசியல் கருத்துகளை சொல்வது நட்புறவை...