கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூப்பனார் கோவில் தெருவில் வசித்து வந்த சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை சோதனை செய்த போது அவர்கள் குடித்த குடிநீரில் கால்நடை தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிப்பட்ட 7 பேரின் ரத்தத்தை ஆய்வு செய்த போது எலிக்காய்ச்சல் பாதிப்பு உறுதியானது.
The post கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு appeared first on Dinakaran.