- அக்நாத் ஷிண்டே
- உத்தவ்
- மும்பை
- உத்வா தாக்கரே
- அவுரங்காபாத், மகாராஷ்டிரா
- Sivasena
- மேலே
- சிவசேனா கட்சி
- சுஸ்மா
மும்பை: கட்சி சின்னம் கைவிட்டு போனது என்று சும்மா… குழந்தையை போல் அழாதீர்கள் என்று உத்தவ் தாக்கரேவை ஏக்நாத் ஷிண்டே விமர்சித்தார். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே ேபசுகையில், ‘சிவசேனா கட்சியின் வில் – அம்பு சின்னத்தை, எங்களிடம் இருந்து ஏக்நாத் ஷிண்டே (முதல்வர்) அணி திருடிவிட்டது. அந்த சின்னத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றதை நினைத்து பெருமிதம் கொள்கிறார்கள். உண்மையில் அந்த சின்னம் எங்களிடம் இருந்து திருடப்பட்டது’ என்றார். உத்தவ் தாக்கரேவின் கருத்துக்கு பதிலளித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ‘எத்தனை முறை தான் இன்னும் சிறு குழந்தைகளை போல அழுவீர்கள். கிராம பஞ்சாயத்து தேர்தலில் அவரது (உத்தவ்) கட்சி ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
நாங்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்தோம். லோக்சபா தேர்தலில் அவர்களை விட நாங்கள் அதிக ஓட்டுகளை பெற்றோம். சின்னத்தை திருடிவிட்டோம் என்று இன்னும் எத்தனை முறை சொல்வீர்கள். நீங்கள் பால்தாக்ரேயின் சித்தாந்தங்களை விட்டு விலகியதால், மக்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கிறார்கள். இதன் மூலம் யாரிடம் சிவசேனா இருக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். சிவசேனாவின் வாக்காளர்கள் எங்களுடன் உள்ளனர். இதை வருகிற சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். வீட்டை விட்டு வெளியே வராத நீங்கள், தற்போது விவசாயிகளை அவர்களின் வயல்களில் சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.
The post கட்சி சின்னம் கைவிட்டு போனது என்று சும்மா… குழந்தை போல் அழாதீர்கள்: உத்தவை விமர்சித்த ஏக்நாத் ஷிண்டே! appeared first on Dinakaran.