×

கோதுமை ரவை புலாவ்

தேவையானவை

கோதுமை ரவை – 200 கிராம்
குடைமிளகாய் – 1
பீன்ஸ் – 10
பச்சை மிளகாய் – 1
பச்சைப்பட்டாணி – 100 கிராம்
வெங்காயம், கேரட்,
உருளைக்கிழங்கு – தலா 1
புதினா – ஒரு கைப்பிடி அளவு
வறுத்த முந்திரி – 10
எண்ணெய், நெய் – தலா 1 தேக்கரண்டி
பொரித்த பனீர்
துண்டுகள் – 10
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

குக்கரில் தேவையான எண்ணெய்விட்டு, காய்ந்ததும், அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கேரட், குடைமிளகாய், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, வதக்கவும். காய்கலவை நன்கு வதங்கியதும் புதினாவையும் போட்டு வதக்கவும். அவை நன்கு வதங்கியதும். கோதுமை ரவையை ஒரு பங்குக்கு இரண்டு பங்கு தண்ணீர்விட்டு மூடி, இரண்டு விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். சூடு ஆறியதும், அதில் வறுத்த முந்திரி, பொரித்த பனீர் சேர்த்து நன்கு கலக்கவும். வெங்காய தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்.

The post கோதுமை ரவை புலாவ் appeared first on Dinakaran.

Tags :
× RELATED விநாயகர் சதுர்த்தி: கொழுக்கட்டை ஸ்பெஷல்