×

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை.. அவர்களை கட்டுப்படுத்துவதே முதன்மை பணி: காவல் ஆணையர் அருண் பேட்டி!!

சென்னை: ரவுடிகளுக்கு புரியும் வகையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர் காவல்துறையின் 110-வது புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி அருண் பொறுப்பேற்றுக் கொண்டார். சந்தீப்ராய் ராத்தோர் மாற்றப்பட்ட நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட அருண் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

ரவுடிகளை கட்டுப்படுத்துவதே முதன்மை பணி: அருண்
ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணியாக இருக்கும் சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும்போது சென்னையில் கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. பொத்தம் பொதுவாக சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு என்று சொல்லக் கூடாது. காலம் காலமாக குற்றங்கள் நடந்து வருகிறது; அதை தடுத்து கொண்டு தான் இருக்கிறோம் என்றார்.

“ரவுடிகளுக்கு புரியும் மொழியில் புரியவைக்கப்படும்”
ரவுடிகளுக்கு புரியும் வகையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடந்த குற்றங்களுக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும், குற்றம் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவோம்; ரவுடிகளை ஒடுக்க வேண்டும், அவர்களுக்கு புரிவது போல் சொல்லித் தரப்படும். மேலும், திறமையான கண்காணிப்பை மேற்கொண்டாலே குற்றங்களை குறைக்க முடியும் என காவல் ஆணையர் அருண் கூறியுள்ளார்.

 

The post ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை.. அவர்களை கட்டுப்படுத்துவதே முதன்மை பணி: காவல் ஆணையர் அருண் பேட்டி!! appeared first on Dinakaran.

Tags : Police Commissioner ,Arun Petty ,Chennai ,Commissioner ,Arun ,IPS ,Commissioner of Police of ,Chennai Metropolitan Police ,Officer ,Chandibrai Rathore ,
× RELATED பணியின்போது உயிரிழந்த உதவி கமிஷனர்...