லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த 4வது சுற்றில், 2ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டைச் சேர்ந்த 19வது ரேங்க்கில் உள்ள 23 வயது எம்மா நவரோவுடன் மோதினார். இதில் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் எம்மா நவரோ வெற்றிபெற்று கிராண்ட்ஸ்லாம் தொடர் ஒன்றில் முதன்முறையாக கால்இறுதிக்கு தகுதிபெற்றார்.
நியூசிலாந்தின் லுலு சன் 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில், இங்கிலாந்தின் எம்மா ராடுகானுவையும், குரோஷியாவின் டோனா வெக்கிச், 6-2, 1-6, 6-4 என ஸ்பெயினின் பவுலா படோசாவையும் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தனர். ஆடவர் ஒற்றையரில் அமெரிக்காவின் டாமி பால் 6-2, 7-6, 6-2 என ஸ்பெயினின் ராபர்டோ பாட்டிஸ்டா அகுட்டை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ், இத்தாலியின் ஜானிக் சின்னர் ஆகியோரும் கால்இறுதிக்குள் நுழைந்தனர்.
The post விம்பிள்டன் டென்னிஸ் நவரோ கால்இறுதிக்கு தகுதி: கோகோ காப் அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.