×

கொலைவெறியுடன் சுற்றித்திரிந்த கும்பல்; போலீஸ் டிராக் செய்தால் சிக்காமல் இருக்க நவீன ஆப்: சிறுவன் உட்பட 5 பேர் கைது

துரைப்பாக்கம்: சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் சந்தியா. முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி கொலை செய்யும் நோக்கத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவ்வழக்கில் கடந்த 6 மாதங்களாக கிருஷ்ணமூர்த்தி தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில், கண்ணகி நகர் போலீசார் தனிப்படை அமைத்து விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தேடினர். செல்போன் எண்ணை டிராக் செய்ய முடியாததால் கண்ணகி நகர் போலீசார் சைபர் கிரைம் போலீசாரின் உதவியை நாடினர். இதனைத்தொடர்ந்து கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்தவர்களின், செல்போன் எண்ணை வைத்து, தொழில்நுட்ப முறையிலும் சைபர் கிரைம் போலீசார் அவர்கள் பயன்படுத்தி வந்த போனை டிராக் செய்ய முயற்சி செய்தனர். அதில் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் எண்களை  ஆப் மூலம் பணம் கொடுத்து வாங்கி பலரை மிரட்டி பணம் பறித்தும், கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், தலைமறைவு குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி மனைவி பிரியாவுக்கும் மாம்பாக்கத்தை சேர்ந்த சேகர் (எ) நாய் சேகருக்கும் கள்ளக்காதல்  இருந்து வந்துள்ளது. இதனால், அவரது மனைவியையும்  கொலை செய்ய திட்டம் தீட்டி சுற்றி வந்ததை போலீசார் தெரிந்து கொண்டனர். அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் அவர்கள் பெருங்குடியில் பதுக்கி இருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களை கைது செய்து விசாரித்ததில் கண்ணகி நகரை சேர்ந்த கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி(32), பெருங்குடியை சேர்ந்த பார்த்திபன்(22),  துரைப்பாக்கத்தை சேர்ந்த ஜெகன்(22), ராஜாராம், மற்றும் ஒரு சிறுவன் என தெரியவந்தது. அவர்களிடமிருந்து 5 பட்டாக் கத்திகள், வெடிபொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். …

The post கொலைவெறியுடன் சுற்றித்திரிந்த கும்பல்; போலீஸ் டிராக் செய்தால் சிக்காமல் இருக்க நவீன ஆப்: சிறுவன் உட்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Durai Pakkam ,Sandhya ,Kannagi Nagar, Chennai ,Krishnamurthy ,
× RELATED திடீரென டயர் வெடித்ததால் கல்லூரி...