×

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.22 கோடி மதிப்புடைய 6 சாமி சிலைகளை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: ரூ.22 கோடி மதிப்புள்ள தொன்மை வாய்ந்த 6 சாமி சிலைகளை மீட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை பெரியார் சமத்துவபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின்போது கார் ஓட்டுநர், அதில் பயணித்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து காரில் சோதனை நடத்தியதில் 6 சாக்குப் பைகளில் சாமி சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சாக்குப் பைகளில் இருந்து திரிபுரந்தகர், வீணாதரத தட்சிணாமூர்த்தி, ரிஷப தேவர் உள்பட 6 சிலைகள் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட 6 சிலைகளும் கொருக்கை கிராமத்தில் லட்சுமணன் என்பவரது வீட்டில் பள்ளம் தோண்டியபோது கிடைத்ததாக தகவல் தெரிவித்தனர். 6 சிலைகளையும் விற்பனை செய்ய திருச்சி வழியாக சென்னைக்கு கொண்டு சென்றபோது போலீசாரிடம் சிக்கினர். ராஜேஷ் கண்ணன், லட்சுமணன், திருமுருகன் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலில் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

The post தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.22 கோடி மதிப்புடைய 6 சாமி சிலைகளை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Sami ,Thanjavur-Tiruchi National Highway ,-Idol Smuggling ,CHENNAI ,Anti-Idol ,Anti-Smuggling Unit ,Tanjore Periyar Samathuvapuram ,Thanjavur-Trichy National Highway ,Anti-Idol Smuggling Unit ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மதனகோபால சாமி கோயிலில்...