×
Saravana Stores

கோவை பாரதியார் பல்கலைகழக பொறுப்பு பதிவாளரை பணி நீக்கம் செய்யக் கோரி வரும் 15-ம் தேதி முதல் போராட்டம்

கோவை: கோவை பாரதியார் பல்கலைகழக பொறுப்பு பதிவாளரை பணி நீக்கம் செய்யக் கோரி வரும் 15-ம் தேதி முதல் போராட்டம் நடைபெறுகிறது. வரும் 15-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக பல்கலைகழக அலுவலர்கள் சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். பாரதியார் பல்கலையில் கடந்த 2 ஆண்டுகளாக துணைவேந்தர் பதவி நிரப்பப்படாததால், பொறுப்பு குழு பணிகளை கவனித்து வருகிறது. மேலும் 7 ஆண்டுகளாக பதிவாளர் பதவியும் நிரப்பப்படாததால், பேராசியர்கள் பொறுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பதிவாளர் ரூபா குணசீலனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பல்கலைகழக அலுவலர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல் தெரிவித்துள்ளனர்.

The post கோவை பாரதியார் பல்கலைகழக பொறுப்பு பதிவாளரை பணி நீக்கம் செய்யக் கோரி வரும் 15-ம் தேதி முதல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore Bharatiyar University ,Coimbatore ,University Officers' Association ,Bharatiyar ,Bharatiyar University ,Dinakaran ,
× RELATED பாரதியார் பல்கலைக்கழக விடுதி குறைபாடு உடனே சரிசெய்யப்படும்