- அமைச்சர்
- டி.ஆர்.பி ராஜா
- கோத்ரெஜ் அக்ரோவெட் கம்பெனி
- தஞ்சோ
- தஞ்சை
- தொழில்
- சேவை நிலையம்
- தஞ்சை
- டெல்டா மாவட்டம்
- தன்ஜ்
- தின மலர்
தஞ்சை: தஞ்சையில் கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் எண்ணெய் பனை சேவை மையத்தை தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா திறந்து வைத்தார். டெல்டா மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. பாமாயில் எண்ணெய் பனை விவசாயிகளுக்கு தேவையான அனைத்து சேவைகளும் இந்த மையத்தில் வழங்கப்படும். சாகுபடி பயிற்சி தொடங்கி கடன் உதவி வரை அனைத்து சேவைகளும் வழங்கப்படும்.
டெல்டா மாவட்டங்களில் முதலீடு செய்ய விருப்பம்
வேளாண் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்கள் டெல்டா மாவட்டங்களில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தன. தஞ்சை ஈச்சங்கோட்டையில் பாமாயில் பழக்குலை கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து அமைச்சர் டிஆர்பி ராஜா பேசிவருகிறார். சென்னை, கோவை மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் தொழில் தொடங்க தொழில் நிறுவனங்களுக்கு. தானியம், சிறுதானியம், காய்கறி, பழங்கள், சாகுபடி பரப்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. டெல்டா மற்றும் மேற்கு மாவட்டத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழல் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. முதலீட்டாளர் சந்திப்பின்போது உணவு பதப்படுத்துதல், வேளாண் சார்ந்த தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் அதிக முனைப்பு. பயிர்களுக்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய சொட்டு நீர் பாசனம் அமைக்க பயிற்சி வழங்கப்படுகிறது.
டெல்டா வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள்
டெல்டா மாவட்டங்களில் பெரிய வளர்ச்சி வர வேண்டும் என்பதற்காக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். டெல்டா பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு ஏற்ற வகையில் தஞ்சாவூரில் எண்ணெய் பனை சேவை மையம் அமைக்கப்பட உள்ளது. குறைவான தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் புதிய வகை விவசாயத்தை நோக்கி நாம் நகர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
The post தஞ்சையில் கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் எண்ணெய், பனை சேவை மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் டிஆர்பி ராஜா..!! appeared first on Dinakaran.