×

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

சென்னை: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு சென்னை மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை  மற்றும் ₹5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர்.நகர் சூளைப்பள்ளம் அண்ணா தெருவை சேர்ந்தவர் ஆரவள்ளி(48). இவர் கடந்த 13.6.2014ம் ஆண்டு தனது இரண்டாவது கணவர் சேகர்(55) என்பவரால் கழுத்து  நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சேகர் தனது மனைவி ஆரவள்ளியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கை முறையாக கையாண்டு குற்றவாளியான சேகர் மீது எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.  பிறகு போலீசார் அல்லிக்குளம் மகிளா நீதிமன்றத்தில் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தினர். அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று முன்தினம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சேகர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ5 ஆயிரம் அபராதம் விதித்தும் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. குற்றவாளி ரூ5 ஆயிரம் அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளியை கைது செய்து சிறப்பு புலனாய்வு செய்து நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற தந்த எம்.ஜி.ஆர்.நகர் போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்….

The post மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mahla Court ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!