×

பருவ மழையால் பசுமையான ஆழியார் வனப்பகுதிகள்

*சுற்றுலா பயணிகள் கண்டுரசிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பருவமழையால், ஆழியார் வனப்பகுதி பச்சை பசேலென உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் துவக்கத்திலிருந்து மே மாதம் வரையிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் ரோட்டோரங்களில் இருந்த செடி, கொடிகள், மரங்கள் வாடி வதங்கியது. அதுபோல், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து வெயிலின தாக்கத்தால், பசுமை குறைந்து வனத்தில் உள்ள மரம், செடிகள் காய்ந்து போனதுடன் பொலிவிழுந்து காணப்பட்டது.

சமவெளிப்பகுதியில் கோடை மழை ஓரவு இருந்தாலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குறைவான மழையே பெய்தது. குறிப்பிட்ட நாட்கள் கோடை மழை பெய்தாலும், சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட துவங்கியது.அதன்பின், கடந்த ஜூன் மாதம் 2வது வாரத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை வலுக்க ஆரம்பித்தது. கடந்த 2 வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால், டாப்சிலிப், பரம்பிக்குளம், ஆழியார் உள்ளிட்ட பகுதி குளுமையாகி, சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டதுடன், பசுமையாகி பார்ப்பதற்கு அழகுடன் உள்ளது.

அதிலும் ஆழியார் சுற்றுவட்டார பகுதியியில், பச்சை பசேல் என பச்சைதுண்டு போர்த்திய இடம்போல் காணப்படுகிறது. இதனால் வெளியூர்களிலிருந்து ஆழியாருக்கு வருவோர் இயற்கை கண்டு ரசிக்கின்றனர். இன்னும் சில மாதத்திற்கு பருவமழை அவ்வப்போது இருக்கும் என்பதால், ஆழியார் சுற்றுலா பகுதி மேலும் அழகுடன் இருக்கும் என சுற்றுலா பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post பருவ மழையால் பசுமையான ஆழியார் வனப்பகுதிகள் appeared first on Dinakaran.

Tags : Aliyar ,Pollachi ,Western Ghats ,Anaimalai ,
× RELATED ஆழியார் அணையில் தொடர்ந்து படகு சவாரி ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்