சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய, வரவேண்டிய 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர். சென்னையிலிருந்து வழக்கமாக பெருநகரங்களான ஐதராபாத், பெங்களூர், கொல்கத்தா குவாஹாத்தி, சீரடி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 7 புறப்படும் விமானங்களும். பல்வேறு நகரங்களிலிருந்து சென்னை வரவேண்டிய 7 விமானங்களும் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள விமான பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக விமானங்களை இயக்க விமானிகள் இல்லாதது, போதிய பயணிகள் இல்லை, மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் விமானங்கள் 14 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விமான அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர். மேலும், லண்டன், சிங்கப்பூர், மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து சென்னை வரும் விமானங்கள் பல மணிநேரம் தாமதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மாற்று விமானங்களில் பல்வேறு நகரங்களுக்கு பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
The post சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய, வரவேண்டிய 14 விமானங்கள் ரத்து: பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.